திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி 7ஆம் தேதி, புதனன்று ரூ.1595 கோடியில், முடிவுற்ற 111 பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணி களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "அமித்ஷாவா, அவதூறுஷாவா? என கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டை நாம் ஆளவேண்டுமா? அல்லது டெல்லியிலிருந்து வேறு யாரோ ஒருவர் ஆளவேண்டுமா?''’என மக்களிடம் கேள்வியை வைக்க, "சுயமரியாதைதான் முக்கியம்' என்றனர் அங்கிருந்தோர்.
1,595 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளுக்காக முதலமைச்சர் திண்டுக்கல் வருகின்றார் என்றவுடனேயே மாவட்டத்திலுள்ள இரு அமைச்சர்களும் விழாவினை சிறப்பிக்க போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்தனர். முதல்வர் ஒருமணி நேரம் மட்டுமே வழங்கியிருந்ததால், ஆட்சியர் துணைகொண்டு நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தனர் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி இருவரும். விழா அரங்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வேலுநாச்சியார் அரங்கில், போக்குவரத்துத் துறை சார்பில் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்த கையோடு, மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக நான்கு சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக நான்கு சக்கர வாகனங்கள் வழங்குதல், கலைஞரின் கைவினைத் திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவை திட்டமிடப் பட்டன. திட்டமிட்டபடி அனைத்தையும் நிறைவுசெய்தார் முதல்வர். முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அரசின் திட்டங்களை முழுமையாகக் கொண்டுசேர்த்த மாவட்டம் திண்டுக்கல்'' என்றார் மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/cm1-2026-01-08-15-20-38.jpg)
அனைத்து நிகழ்வுகளையும் மகிழ்வுடன் நிறைவு செய்த முதல்வரோ, "திண்டுக்கல் என்பது எழுச்சியின் பெயர், புரட்சியின் பெயர். ஹைதர்அலி, திப்பு சுல்தான், வேலுநாச்சியார், கோபால் நாயக்கர் உள்ளிட்ட தீரர்கள் வாழ்ந்த மண்ணில் உங்களைச் சந்திக்கிறேன். இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று வியக்கும்வண்ணம் உள்ளது. உங்கள் முகங்களில் மகிழ்ச்சியைக் காணத்தான் பல திட்டங்களை அரசு செய்துள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும்போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழ்நாட்டில் 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்திருக் கிறோம். இப்படி ஒரு சாதனையை பா.ஜ.க. ஆள்கிற மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. 9,997 கோவில்களில் 771 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் அரசைப் பாராட்டுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் வாரம் இருமுறை இந்து சமய பணிகளைத் தொடங்கிவைக்கிறேன். அனைத்து சமயத்தவர்கள் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக் கிறோம். இப்படியிருக்கும்போது துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. அவர் "அமித்ஷாவா அல்லது அவதூறுஷாவா' என்று சந்தேகம் வருகிறது. அதோடு தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமையவேண்டுமா? என அமித்ஷா கேட்கிறார். அதையேதான் நாங்களும் சொல் கிறோம். தமிழ்நாட்டை நாம் ஆளவேண்டுமா? அல்லது டெல்லியிலிருந்து வேறு யாரோ ஒருவர் ஆளவேண்டுமா? என முடிவுசெய்யும் தேர்தல் இது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால். பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டுவர எடப்பாடி பழனிசாமி பாடுபடுகிறார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டை நீங்க ஆளணுமா? இல்லை அ.தி.மு.க. மூலமாக டெல்லியிலிருந்து ஆளவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்'' என மக்களின் மனதில் வினாக்களை எழுப்பினார் முதல்வர்.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்ரபாணி, மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் உள் ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மக்கள் இயக்கம் சார்பில் "100 நாள் வேலையைக் காப்போம்!' என்ற அறிவிப்பின்கீழ் கரூர் எம்.பி. ஜோதிமணி ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களை சந்தித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதி கல்வார்பட்டி பகுதியில் கிராம மக்களை சந்தித்துப் பேசியபோது, அங்கு வந்த ஒருவர் "எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்' என்று கரூர் எம்.பி. ஜோதிமணியிடம் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட... அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் பெரியசாமி அவரை விரட்டியடித்தார்.
-வேகா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/08/cm-2026-01-08-15-20-19.jpg)